அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!!
கோடானுகோடி மக்கள் கொண்டாடும் கர்த்தர்.. கதிரவனா? சென்ற பதிவில் தெரிவித்ததைப்போல இதோ இயேசு கிறிஸ்து பற்றி சற்றே கூர்ந்து கவனிப்போம். பைபிள் மூலமாக நாம் அறிந்த தகவல்களையே ஆராய்வோம்..
இயேசு கிறிஸ்து -
பிறப்பு : 25 டிசம்பர் கி.மு 7-2 (தோராயமாக)
பிறப்பிடம் : யூதேயவிலுள்ள 'பெத்லகேம்'
பெற்றோர் : மரியாள் (கன்னித்தாய், குந்தியைப்போல் கடவுளின் அனுகிரகத்தால் தாயானவள்)
மத்தேயு 2:1-2 ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து 3 அறிஞர் எருசலேமுக்கு வந்து: ''யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறார் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரை பணிந்துகொள்ள வந்தோம்'' என்றார்கள்.
இயேசு எருசலத்திலிருந்து 5 மைல் தொலைவிலுள்ள பெத்லகேம் ஒரு ஊரில் மாட்டு கொட்டகையில் பிறந்தார் என்றே பொதுவாக கூறப்படுகிறது/நம்பப்படுகிறது. பெத்லகேம் (ஹீப்ரூ: בית לחם) வார்த்தைக்கு ''House of bread'' என்று பொருள். இயேசு பிறப்பை அறிய இதுவே முதல் படி, மக்கள் நினைப்பதைப்போல ''கன்னித்தாய்'' மரியாளின் ஊர் அல்ல.. அதாவது பெத்லகேம் மண்ணிலுள்ள நகரம் அல்ல.. விண்ணிலுள்ள ''House of Bread'' என்று செல்லமாக அழைக்கப்படும் ''கன்னி'' ராசியைக்குறிக்கும்.
கன்னி ராசி என்பதில் பலருக்கு தெரிந்த தகவலை திரும்ப நினைவுறுத்த விரும்புகிறேன். வானசாஸ்திரம்/சோதிட சாஸ்திரம் இரு வகைப்பட்டது இந்தியாவில் சொல்லப்படும் நட்சத்திரப் பலன்கள் திங்கள்/சந்திரன் காணப்படும்/சஞ்சரிக்கும் ராசியைக்கொண்டே செயல்படுகிறது. மேற்கத்திய சோதிடம் சூரியன் எந்த ராசியில் காணப்படுகிறான் என்பதைக்கொண்டதாகும். அதன்படியே இதனை பார்க்கவேண்டும். கன்னி ராசி அவர்களுக்கு அறுவடைக்காலம், அதனாலேயே ''House of bread'' என்று கன்னி ராசியைக்குறிப்பிடுவர். இதற்கும் இயேசுவிற்கும் என்ன சம்பந்தம்?
இயேசு கன்னித்தாய் மரியாளின் மகனாக பெத்லகேமில் பிறந்தார். அதை மூன்று அறிஞர்கள் கிழக்கிலிருந்து அறிந்து வந்தனர். எப்படி அறிந்தனர்? கிழக்கில் தோன்றிய நட்சத்திரத்தைக்கண்டு.. அந்த நட்சத்திரம் பிறக்கவிருக்கும் இறைவனைக்குறிக்கும். வானம்பார்த்த பூமி.. மழை மற்றும் சூரியவொளி இரண்டுமே விவசாயத்திற்கு முக்கியம். அதுவும் மேற்கத்திய நாடுகளில் மழையை விடவும் முக்கியத்துவம்வாய்ந்தது சூரியன். அதனால் கதிரவனையே கடவுளாக வணங்கினர். அவ்வாறாக பருவகால மாற்றங்களினால் சூரியன் வலுவிழந்து காணப்படும் நாட்கள் டிசம்பர் 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகள் (winter solstice), அப்பொழுதே crux எனப்படும் சிலுவை தென்படும். 25 டிசம்பர் அன்று இருட்டை வெல்லும் திறன்கொண்ட அக்கினிப்பந்தாக தோன்றும் சூரியனை கடவுளாக கண்டனர்.
![]() |
| வருடாவருடம் நிகழும் பருவமாற்றங்களைக்குரிக்கும் படம். டிசம்பர் மாதத்தின் 21/22 ஆம் நாட்கள் இந்த பருவத்தில் சூரியவொளி சற்றே வலுவிழக்கும். |
இப்பொழுது சற்று இயேசுவிற்கு வருவோம்..
மத்தேயு 2:1-2 வானில் உள்ள பெத்லகேம் என்ற கன்னி (ராசியைக்குறிக்கும்) மரியாளின் மடியில் (ராசியில்)இயேசு/கதிரவன் பிறந்தபோது கிழக்கிலிருந்து 3 அறிஞர்கள்:
யாரிந்த அறிஞர்கள்? வேறுயாருமில்லை ''Cheetha fight'' தீப்பெட்டியை பார்த்திருக்கிறீர்களா? அதில் தென்படும் நட்சத்திர குவியலில் ஒரு ஆணின் இடுப்பு பகுதியை குறிக்கும் வண்ணமாக காணப்படும் மூன்று நட்சத்திரங்களே (Orion the hunter) அந்த மூன்று அறிஞர்கள்..
மற்றொரு சிறப்பம்சம் பெண்களைக்குறிக்கும் முக்கோணம். ஆணை குறிக்கும் முக்கோணம் பிரமிட் போன்றது, பெண்ணை குறிக்கும் முக்கோணம் மேல்பகுதி அகலமாகவும் கீழ்பகுதி கூர்மையாகவும் அதாவது குழந்தையைத் தாங்கும் கருப்பையை குறிப்பால் உணர்த்தும் முக்கோணம்..
எருசலேமுக்கு வந்து: ''யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறார் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரை பணிந்துகொள்ள வந்தோம்'' என்றார்கள். மூன்று அறிஞர்கள் கண்ட அந்த நட்சத்திரம் ''Sirius'' (சூரியனை விட பல மடங்கு பெரியது) வானில் இரவு நேரத்தில் பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரம்.
இவை அனைத்தையும் குறிப்பது டிசம்பர் 25 அன்று இருளை அழித்து பிறக்கும் கர்த்தராகிய ''சூர்யோதயத்தை'' தான்.. Sirius ஐ தொடர்ந்து தென்படும் Orion the hunter நட்சத்திரங்கள் (ζ Ori, Alnitak, ε Ori, Alnilam மற்றும் δ Ori, Mintaka).
மத்தேயு 2:1-2 வானில் உள்ள பெத்லகேமில் என்ற கன்னி (ராசியைக்குறிக்கும்) மரியாளின் மடியில் (ராசியின் முக்கோணம்) இயேசு (கதிரவன்) பிறந்தபோது கிழக்கிலிருந்து 3 அறிஞர்கள் (ζ Ori, Alnitak, ε Ori, Alnilam மற்றும் δ Ori, Mintaka) ''யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறார் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் (Sirius ஐ) கண்டு அவரை பணிந்துகொள்ள வந்தோம்'' என்று அவர்கள் கூறியதாக நான் சொல்வதை உணர சிரமமாக இருந்தால் இதோ இந்த படத்தை நன்றாகப் பாருங்கள்.. புரியும்..
இவ்வாறாக சூரிய வழிபாட்டில் பல காலமாக வாழ்ந்து வந்த நம்பிக்கைக்கு (Pagan) எந்தவிதத்திலும் மாறாமல் ஒரே கடவுள் வழிபடும் மதமான (Monotheism) கிருத்துவ மதத்தில் தென்படும் இந்த தகவல்கள் நம்மை ஆச்சர்யபடுத்துகின்றன.. இயற்கை வழிபாடு தவறு, அவை சாத்தானை வழிபடுதலுக்கு இனையானதென்று கூறும் எனது கிருத்துவ நண்பர்கள் இந்த தகவல்களை அறிய முனைவதில்லை..
கீழையும் வெளுத்தது.. கதிரும் துளிர்த்தது.. இறைச்சாயம் வெளுக்கும் காலமும் தோன்றுமோ?
வெளுப்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.. தங்கள் மேலான கருத்துக்களையும் தெரிவிக்கவும்..







