தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாத்துறைகளிலும் எப்படி மிளிர்கிறதோ, அதே போல மிதிவண்டி கட்டமைப்களில் பல மேம்பாடுகளை காண முடியும். மிதிவண்டிகளின் வடிவமைப்பில் துவங்கி - உதிரி பாகங்கள் - உடைகள் வரை வருடாவருடம் பல மாபெரும் கண்காட்சிகள் நடப்பதும், மிதிவண்டிஓட்டுவதை ஒரு கலையாக, அறிவியலாக, வரலாற்றுடன் கூடிய ஆராய்ச்சியாகவும் பல பரிமாணங்களை விஞ்ஞான யுகம் நமக்களிக்கிறது. அதைப்பற்றி இந்த பதிவில் சிறிது விவரிக்கிறேன்.
பின் குறிப்பு: சென்ற பதிவு வரை தங்களுடன் உரையாடும் ஒரு நடையிலேயே தங்களுக்களித்தேன், அந்த பதிவுகளில் ஆழமில்லா தமிழில் எழுதியதாக இருப்பதாகவும் இன்னும் சிறிது மெருகேற்றமுடியும் என்ற எண்ணம் மேலோங்க, இதோ இந்த பதிவில் சற்றே வேறுபடுத்தியெழுத முற்றப்படுகிறேன்.
விஞ்ஞான வளர்ச்சி விண்ணுயர மிதவை பலகையை (Hoverboard) நோக்கித்தான்போகும் என்று அறிவியல்-புனைக்கதாசிரியர்கள் கணித்தனர். மிதிவண்டி, ஒரு தொன்பொருள், இன்றைய வேகத்திற்கு அதை யார் சீண்டப்போகிறார்கள் என்ற ஒரு பார்வையே சிலருக்கு இருந்தது. மறுசாராரோ, மிதிவண்டியை வேறு தளத்திற்கு இட்டுச்சென்றனர். மிதிவண்டிகளில் பல வகையுள்ளது, அது பற்றி எழுத பலவாரங்களாகும். சுருக்கமாக, நான் பயன்படுத்தும் சில கடைநிலை கருவிகளையும், என்னிடம் இருக்கும் இரண்டுவகை மிதிவண்டிகளைப்பற்றியும் எழுதவிளைகிறேன்.
சென்றபதிவில் மிதிவண்டிகளுக்கான உபரி-உடைகளை எடுத்துரைத்தேன், எந்த உடையணிந்தாலும் மிதிவண்டிதானே நம்மை துரிதப்படுத்தும்?
காளி:
2011வாக்கில், விளையாடச்செல்ல மட்டுமே பயன்படுத்த வாங்கிய முதல் மிதிவண்டி Bulls 7000 comp (செல்லமாக காளை அல்லது கருப்பு நிறமாயிருந்ததால் இந்தியில் काली + காளை = காளி; காரணப்பெயர்), என்ற மலையேற்றம் மற்றும் வயல்வெளிச்சலையில் ஓட்டவும் உகந்த ஒரு கலவை மிதிவண்டி. ஜெர்மனியில் மிதிவண்டிகளின் விலை மிகவும் அதிகம், அதனால் புதிதாக வாங்காமல் பயன்படுத்தப்பட்ட வண்டியை வாங்க என் நம்பர் அறிவுறுத்தினார். அதன்பேரில் ஒரே மாதிரியான வண்டியை ஒருவர் €50 குறைவாக கொடுக்கிறார் என்று அவர் கூற, சரிதான் என்று இந்த மிதிவண்டியை வாங்கியது ஒரு மடத்தனமாக சில நாட்களிலேயே பட்டது. விலைகுறைப்பிற்கு பின்னே இருந்தது தேய்மானமடைந்த பாகங்களுக்கு அளிக்கப்பட தள்ளுபடி என்றுணர்த்தேன். €80 கொடுத்து பல்சக்கரங்களை மாற்றவேண்டிய கட்டாயம், ஏறிமிதிக்க முடியாது, முயன்றால் சங்கிலி கழண்டுவிடுமென்று பயத்தோடு ஓட்டவேண்டிய நிலை. இப்படி தான் பலமயில்களை கடந்தேன். எவ்வளவு வேகம், எவ்வளவு தூரம், என்ன விசை, எவ்வளவு நேரம் என்ற சிறு சிறு அம்சங்களை தேடியறிய ஆர்வமதிகம். ஆனால் ரண்டாஸ்டிக் என்ற அலைபேசியில் ஒரு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து வண்டி ஓட்டி முடியவதற்குள் மின்கலம் முடிந்துவிட்டது, (புவியிடங்காட்டி பயன்படுத்திக்கொன்டே வடிவிடுவதால்), புவியிடங்காட்டி சில சமயம் தொடர்பை இழந்தது. இவ்வாறு சில பல அசௌகிரியம் ஏற்பட்டதால் இந்த கருவியை வாங்கினேன் (பார்க்க படம்).
இதன் தொழில்நுட்பம் எளியது, காந்தம் பதித்த ஒரு பாகத்தை ஆரங்களில் பொருத்தி மாற்றுரு பாகம் மிதிவண்டியில் சக்கரத்தை தாங்கும் பாகத்தில் பொறுத்திவிடவேண்டும். சக்கரத்தின் அளவை வைத்து சக்கரத்தில் சுழற்சியின் விசையை கணிக்கிறது. அதுமற்றுமின்றி, சிறிய வெப்பமானியும் இருப்பதால் கூடுதல் அனுகூலம். அதன்படி நீங்கள் எவ்வளவுதூரம் பயணித்தீர், அவ்வாறு எவ்வளவு எரிபொருளை சேமித்தீர் என்று பல விவரங்களை நீங்கள் கண்காணிக்கலாம். படத்தில் உள்ளதை போல், 4400 கி.மீ, 377 லி எரிபொருள் பயன்பட்டிருக்கலாம். இந்த கருவி வாங்க மற்றோரு காரணம், குளிர்காலங்களில் அலைபேசியில் அந்த பயன்பாட்டை தொடங்க கையுறையை கழற்றிவிட்டு பிறகு இயக்கவேண்டிய நிலை. இந்த கருவி பொருத்தி சக்கரம் சுழலும்போதே ஆரம்பித்திவிடும் அதன் கணக்கை.
குளிர் மிகவும் அதிகமாகும் போது நாம் அணியத்தகுந்த உடைகளைப்பற்றி சென்ற பதிவில் கூறியது போல, மிதிவண்டிக்கு அணிவிக்கவேண்டிய ஒரு அம்சம் 'கூர்முனைகளைக்கொண்ட/ஆணிகள் பதித்த வட்டகை' (Studded tires).
படத்தில் உள்ளது போல பல அங்குலங்கள் பனி கொட்டிக்கிடக்கையில், வட்டகைகளில் நிலத்தில் உராய்வின்றி பனி தடுத்துவிடும். இவ்வாறு உராய்வு குறையக்குறைய பனி வட்டகை மத்தியிலிருக்கும் சிறு இடைவெளிகளிலும் படிந்து உறைந்து போய்விடும், அப்படியானால் சக்கரம் மணல்குழியில் சிக்கியதுபோல ஒரே இடத்தில் சிக்கிக்கொள்ளும். ஏற்றமான இடங்களில் இது அதிக உபத்திரவம் கொடுக்கும். இதை எதிர்கொள்ளவே படத்திலுக்கது போன்ற வட்டகையை பனிக்காலத்தில் பயன்படுத்துவேன்.
கபாலி:
தினமும் மிதிவண்டியில் தான் பயணம் என்றான பிறகு, வண்டியில் சில பிரச்சனைகளால் பேருந்தை நாடுவது ஒரு வித அசௌகிரயமாக, இன்னுமொரு மிதிவண்டி இருந்தால் உதவிகரமாக இருக்குமே என்று வேறொரு வண்டியை வாங்கலாம் என்று முடிவெடுத்தேன். பனி காலம் முடிந்தபிறகு, மேலையற பயன்படுத்தும் வண்டியை வாங்கலாமா அல்லது போட்டியில் வேகமாக செல்ல பயன்படுத்தப்படும் வண்டியை வாங்குவதா என்ற சிறு குழப்பமிருந்தது.
மிதிவண்டிகள் பல வகைப்படும், சுருக்கமாக, படத்திலுள்ளது போல 4 விதமாக அமரும் பங்குகள் உண்டு. இடதுபுறம் மேலே இப்படி குறைவான வாட்டமான (Aerodynamic) இழு விசைக் கொண்டதனால் போட்டிகளில் இவ்வகை மிதிவண்டிகளை போட்டிகளில் பார்க்கலாம் Road bike என்றழைக்கப்படும். குனிந்தவாறே ஓட்டும் பங்கு எதிர்காற்றிலிருந்து காப்பாற்றும். நீண்ட வேகமான பயணத்திற்கு இது உதவும்.
வலது மேல்புறம் உள்ளது போன்ற பாங்கு சௌகரியமாக அமரும் இருக்கையும் கைப்பிடியும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் வண்ணம் இருக்கும். நீண்ட மிருதுவான பயணத்திற்கு இது உதவும்.
இடது கீழ்ப்படத்தில் உள்ளது ஆக்கிரோஷமான அதிவேகப்போட்டிகளில் பயன்படுத்தப்படும் மிதிவண்டியில் அமரும் பாங்கு. காற்று பலமாக அடித்தால், வண்டியை சாய்த்துவிடும் வாய்ப்பும் உள்ளது அவ்வளவு இலேசானது.
கீழே வலதுபுறமிருப்பது இருக்கை கைப்பிடியின் நேர்கோட்டில் அல்லது அதைவிட கீழே இருக்கும் வண்ணம் மிகவும் இலகுவான பயணத்திற்கு உதவும்.
காளி என்று அந்த மிதிவண்டிக்கு பெயரிட்டதாலும், ரஜினிகாந்த் நடித்து நான் வண்டிவாங்க எண்ணியபோது வெளிவரவிருந்த கபாலி திரைப்படம் இருண்டுமாக புதிய வண்டிக்கு கபாலி என்று பெயரிட்டேன். Road bike - Endurance வகையிலான இந்த வண்டியே என் தேவைகளை பூர்த்திசெய்யும் வண்டியாக தெரிந்தது. சுமார் 10 கிலோ எடையுள்ள இந்த வண்டி மெல்லிய வட்டகையைக் கொண்டது. பார்க்க படம்.
காலனிகளை மிதிவண்டியுடன் பொருத்தும் வகையில் மிதியுடன் பொருத்தும் வன்னம் காலனியில் 4 துவாரம் கொண்ட தாங்குறுப்புகளை பொருத்தி படத்திலுள்ளது போல பொருத்திக்கொள்ளலாம்.
இப்படியாக உடலின் நீட்டிப்பாக மிதிவண்டியை மாற்றிக்கொள்ளலாம். வழியில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடகங்களில் மட்டும் மிகவும் பதட்டமாக சில நாட்களிருந்தது. கால்களை மிதியிலிருந்து எடுக்க இளவில்லையென்றால் கீழே கால் ஊன்றாமல் சமநிலை மேற்கொள்ளவது கடினம். போகப்போக இந்த வகை மிதிகளும் பழகிவிடும். மலையேற்றங்களில் மிதி மீது கால்களை வைத்திருக்க சிரமமின்றி இந்த மிதிகள் பார்த்துக்கொள்ளும். அதுமற்றுமின்றி 3x8 என்று பற்சக்கரங்கள் காளியில் இருக்கும் ஆனால் இங்கே 11 ஸ்பீட் டிஸ்க் பிரேக் என வேகத்தையும் கட்டுப்பாட்டையும் நல்ல விகிதத்தில் தக்கவைக்கிறது. 60-70 கி.மீ வேகத்திலும் காற்றைக்கிழித்துக்கொண்டு செல்ல முடியும். மெல்லிய வட்டகை அதிக வேகத்தில் செல்ல பயன்படும்.
இலகுவாக அதே நேரம் மிகவும் உறுதியாகவும் இருக்கும் அலுமினியத்தால் ஆனா இந்த மிதிவண்டியை கரிம-இழை (Carbon fiber) கொண்ட இலகுவான மற்றொரு வகையும் கூட உண்டு. பொதுவாக, வண்டி மிருதுவாக ஓடவே விரும்புவர், ஆனால் Road-bike வகை மிதிவண்டிகள் விறைப்புத்தன்மை (Stiff) கொண்ட, சாலையில் இருக்கும் சிறு சிறு ஏற்ற இருக்கங்களையும், உதறல்களையும் உணரவே இந்த அமைப்பு, இதில் ஒரு இன்பம் என்று மிதிவண்டியை ரசித்து காற்றைக்கிழித்துக்கொண்டு போக என்ன ஒரு ஆனந்தம்..
பின் குறிப்பு: சென்ற பதிவு வரை தங்களுடன் உரையாடும் ஒரு நடையிலேயே தங்களுக்களித்தேன், அந்த பதிவுகளில் ஆழமில்லா தமிழில் எழுதியதாக இருப்பதாகவும் இன்னும் சிறிது மெருகேற்றமுடியும் என்ற எண்ணம் மேலோங்க, இதோ இந்த பதிவில் சற்றே வேறுபடுத்தியெழுத முற்றப்படுகிறேன்.
விஞ்ஞான வளர்ச்சி விண்ணுயர மிதவை பலகையை (Hoverboard) நோக்கித்தான்போகும் என்று அறிவியல்-புனைக்கதாசிரியர்கள் கணித்தனர். மிதிவண்டி, ஒரு தொன்பொருள், இன்றைய வேகத்திற்கு அதை யார் சீண்டப்போகிறார்கள் என்ற ஒரு பார்வையே சிலருக்கு இருந்தது. மறுசாராரோ, மிதிவண்டியை வேறு தளத்திற்கு இட்டுச்சென்றனர். மிதிவண்டிகளில் பல வகையுள்ளது, அது பற்றி எழுத பலவாரங்களாகும். சுருக்கமாக, நான் பயன்படுத்தும் சில கடைநிலை கருவிகளையும், என்னிடம் இருக்கும் இரண்டுவகை மிதிவண்டிகளைப்பற்றியும் எழுதவிளைகிறேன்.
சென்றபதிவில் மிதிவண்டிகளுக்கான உபரி-உடைகளை எடுத்துரைத்தேன், எந்த உடையணிந்தாலும் மிதிவண்டிதானே நம்மை துரிதப்படுத்தும்?
காளி:
2011வாக்கில், விளையாடச்செல்ல மட்டுமே பயன்படுத்த வாங்கிய முதல் மிதிவண்டி Bulls 7000 comp (செல்லமாக காளை அல்லது கருப்பு நிறமாயிருந்ததால் இந்தியில் काली + காளை = காளி; காரணப்பெயர்), என்ற மலையேற்றம் மற்றும் வயல்வெளிச்சலையில் ஓட்டவும் உகந்த ஒரு கலவை மிதிவண்டி. ஜெர்மனியில் மிதிவண்டிகளின் விலை மிகவும் அதிகம், அதனால் புதிதாக வாங்காமல் பயன்படுத்தப்பட்ட வண்டியை வாங்க என் நம்பர் அறிவுறுத்தினார். அதன்பேரில் ஒரே மாதிரியான வண்டியை ஒருவர் €50 குறைவாக கொடுக்கிறார் என்று அவர் கூற, சரிதான் என்று இந்த மிதிவண்டியை வாங்கியது ஒரு மடத்தனமாக சில நாட்களிலேயே பட்டது. விலைகுறைப்பிற்கு பின்னே இருந்தது தேய்மானமடைந்த பாகங்களுக்கு அளிக்கப்பட தள்ளுபடி என்றுணர்த்தேன். €80 கொடுத்து பல்சக்கரங்களை மாற்றவேண்டிய கட்டாயம், ஏறிமிதிக்க முடியாது, முயன்றால் சங்கிலி கழண்டுவிடுமென்று பயத்தோடு ஓட்டவேண்டிய நிலை. இப்படி தான் பலமயில்களை கடந்தேன். எவ்வளவு வேகம், எவ்வளவு தூரம், என்ன விசை, எவ்வளவு நேரம் என்ற சிறு சிறு அம்சங்களை தேடியறிய ஆர்வமதிகம். ஆனால் ரண்டாஸ்டிக் என்ற அலைபேசியில் ஒரு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து வண்டி ஓட்டி முடியவதற்குள் மின்கலம் முடிந்துவிட்டது, (புவியிடங்காட்டி பயன்படுத்திக்கொன்டே வடிவிடுவதால்), புவியிடங்காட்டி சில சமயம் தொடர்பை இழந்தது. இவ்வாறு சில பல அசௌகிரியம் ஏற்பட்டதால் இந்த கருவியை வாங்கினேன் (பார்க்க படம்).
| சிக்மா மிதிவண்டிக் கணினி |
இதன் தொழில்நுட்பம் எளியது, காந்தம் பதித்த ஒரு பாகத்தை ஆரங்களில் பொருத்தி மாற்றுரு பாகம் மிதிவண்டியில் சக்கரத்தை தாங்கும் பாகத்தில் பொறுத்திவிடவேண்டும். சக்கரத்தின் அளவை வைத்து சக்கரத்தில் சுழற்சியின் விசையை கணிக்கிறது. அதுமற்றுமின்றி, சிறிய வெப்பமானியும் இருப்பதால் கூடுதல் அனுகூலம். அதன்படி நீங்கள் எவ்வளவுதூரம் பயணித்தீர், அவ்வாறு எவ்வளவு எரிபொருளை சேமித்தீர் என்று பல விவரங்களை நீங்கள் கண்காணிக்கலாம். படத்தில் உள்ளதை போல், 4400 கி.மீ, 377 லி எரிபொருள் பயன்பட்டிருக்கலாம். இந்த கருவி வாங்க மற்றோரு காரணம், குளிர்காலங்களில் அலைபேசியில் அந்த பயன்பாட்டை தொடங்க கையுறையை கழற்றிவிட்டு பிறகு இயக்கவேண்டிய நிலை. இந்த கருவி பொருத்தி சக்கரம் சுழலும்போதே ஆரம்பித்திவிடும் அதன் கணக்கை.
குளிர் மிகவும் அதிகமாகும் போது நாம் அணியத்தகுந்த உடைகளைப்பற்றி சென்ற பதிவில் கூறியது போல, மிதிவண்டிக்கு அணிவிக்கவேண்டிய ஒரு அம்சம் 'கூர்முனைகளைக்கொண்ட/ஆணிகள் பதித்த வட்டகை' (Studded tires).
படத்தில் உள்ளது போல பல அங்குலங்கள் பனி கொட்டிக்கிடக்கையில், வட்டகைகளில் நிலத்தில் உராய்வின்றி பனி தடுத்துவிடும். இவ்வாறு உராய்வு குறையக்குறைய பனி வட்டகை மத்தியிலிருக்கும் சிறு இடைவெளிகளிலும் படிந்து உறைந்து போய்விடும், அப்படியானால் சக்கரம் மணல்குழியில் சிக்கியதுபோல ஒரே இடத்தில் சிக்கிக்கொள்ளும். ஏற்றமான இடங்களில் இது அதிக உபத்திரவம் கொடுக்கும். இதை எதிர்கொள்ளவே படத்திலுக்கது போன்ற வட்டகையை பனிக்காலத்தில் பயன்படுத்துவேன்.
![]() |
| ஆணிகள் பதித்த வட்டகை |
கபாலி:
தினமும் மிதிவண்டியில் தான் பயணம் என்றான பிறகு, வண்டியில் சில பிரச்சனைகளால் பேருந்தை நாடுவது ஒரு வித அசௌகிரயமாக, இன்னுமொரு மிதிவண்டி இருந்தால் உதவிகரமாக இருக்குமே என்று வேறொரு வண்டியை வாங்கலாம் என்று முடிவெடுத்தேன். பனி காலம் முடிந்தபிறகு, மேலையற பயன்படுத்தும் வண்டியை வாங்கலாமா அல்லது போட்டியில் வேகமாக செல்ல பயன்படுத்தப்படும் வண்டியை வாங்குவதா என்ற சிறு குழப்பமிருந்தது.
![]() |
| 4 வித மதிவண்டிகளும் அமரும் பாங்கும் |
மிதிவண்டிகள் பல வகைப்படும், சுருக்கமாக, படத்திலுள்ளது போல 4 விதமாக அமரும் பங்குகள் உண்டு. இடதுபுறம் மேலே இப்படி குறைவான வாட்டமான (Aerodynamic) இழு விசைக் கொண்டதனால் போட்டிகளில் இவ்வகை மிதிவண்டிகளை போட்டிகளில் பார்க்கலாம் Road bike என்றழைக்கப்படும். குனிந்தவாறே ஓட்டும் பங்கு எதிர்காற்றிலிருந்து காப்பாற்றும். நீண்ட வேகமான பயணத்திற்கு இது உதவும்.
வலது மேல்புறம் உள்ளது போன்ற பாங்கு சௌகரியமாக அமரும் இருக்கையும் கைப்பிடியும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் வண்ணம் இருக்கும். நீண்ட மிருதுவான பயணத்திற்கு இது உதவும்.
இடது கீழ்ப்படத்தில் உள்ளது ஆக்கிரோஷமான அதிவேகப்போட்டிகளில் பயன்படுத்தப்படும் மிதிவண்டியில் அமரும் பாங்கு. காற்று பலமாக அடித்தால், வண்டியை சாய்த்துவிடும் வாய்ப்பும் உள்ளது அவ்வளவு இலேசானது.
கீழே வலதுபுறமிருப்பது இருக்கை கைப்பிடியின் நேர்கோட்டில் அல்லது அதைவிட கீழே இருக்கும் வண்ணம் மிகவும் இலகுவான பயணத்திற்கு உதவும்.
காளி என்று அந்த மிதிவண்டிக்கு பெயரிட்டதாலும், ரஜினிகாந்த் நடித்து நான் வண்டிவாங்க எண்ணியபோது வெளிவரவிருந்த கபாலி திரைப்படம் இருண்டுமாக புதிய வண்டிக்கு கபாலி என்று பெயரிட்டேன். Road bike - Endurance வகையிலான இந்த வண்டியே என் தேவைகளை பூர்த்திசெய்யும் வண்டியாக தெரிந்தது. சுமார் 10 கிலோ எடையுள்ள இந்த வண்டி மெல்லிய வட்டகையைக் கொண்டது. பார்க்க படம்.
| கபாலி |
காலனிகளை மிதிவண்டியுடன் பொருத்தும் வகையில் மிதியுடன் பொருத்தும் வன்னம் காலனியில் 4 துவாரம் கொண்ட தாங்குறுப்புகளை பொருத்தி படத்திலுள்ளது போல பொருத்திக்கொள்ளலாம்.
![]() |
| காலனியில் |
![]() |
| மிதியில் |