சைக்கிளில் மலையேற்றம் முதல் அனுபவம்:
மிதிக்க ஆரம்பித்தேன், formal துணிமணி அணிந்து, முதுகில் மணிக்கணினி, தோலிலான காலனி சகிதம் மிதக்க ஆரம்பித்தேன். நான் எதிர்கொண்ட அந்த அனுபவத்தை விவரிக்க முதலில் அது பற்றிய சில குறிப்புகள் இருந்தால் எளிமையாக இருக்கும்.
நரம்புசார் நோயியல் (Neuropathology) துறையில் அப்பொழுது பணி. எனது உயரதிகாரி, ஒரு மருத்துவர், உல்மிலிருந்து குங்ஸ்பெர்க் என்ற ஊருக்கு தினசரி பயணம் அவருக்கு. ஆய்வகம் உல்மில், அவரது நரம்புசார் நோயியல் மருத்துவ ஆய்வகம் குங்ஸ்பெர்கில். அதனால் தினசரி காலை 7:30-8:00 வரை எனது ஆய்வறையில் செய்யும் ஆராய்ச்சிகளைப்பற்றி அவருக்கு விவரித்து, அவரின் கருத்துக்களையும் வழிபடுத்தலையும் அந்த அரைமணிநேரத்தில் பேசிமுடித்துவிடவேண்டும். அவ்வாறாக நான் 7:30க்கு தயார்நிலையில் இருக்கவேண்டுமென்றால் 7:15 முதல் தேவையான ஆவணங்கள் எல்லாம் தயார்படுத்தவேண்டும். சைக்கிளில் சென்றால் காலை 7:00 மணிக்கு பணிபுரியும் கட்டடத்தின் அடித்தளத்தில் இருக்கும் குளியலறையில் குளித்துதெளித்து தயாராகி வர வேண்டும். வீட்டிலிருந்து அங்கே செல்ல 7 கி.மீ பிடிக்கும் கால அவகாசம் 25-28 நிமிடங்கள் (ஆமாம் துல்லியமாக அலைபேசியில் கணக்கிட்ட காலநேரம்), 147 மீட்டர் உயரம். ஆகா 6:30-6:45 மணிக்கெல்லாம் பெட்டியை கட்டினால் தான் தாமதமின்றி அங்கு சென்றடைய முடியும். அதுவே டிராம் என்றால் 6:45 மணிக்கு வண்டி ஏறி ஒரு பேருந்தை பிடித்து சென்றடைய 20-30 நிமிடங்கள் பிடிக்கும் (ஒரு பேரூந்தை தவறவிட்டால் அடுத்ததுவர 10 நிமிட இடைவெளி). ஆறாம் எண் பேரூந்து ஊர் சுற்றி போய் ஒரு நிறுத்தத்திற்கு முன் நின்றுவிடும், ஏதாவது படித்துக்கொண்டே போக வசமாக இருக்கும். சைக்கிள் ஆறாம் எண் பேருந்து தடமோ மூன்றாம் தடமோ எனக்கு அப்போது தெரியாமல் போனதே பெரிய குழப்பம்.
தட்டுத்தடுமாறி ஒருவழியே பல்கலைக்கழ வழியென நம்பி போன எனக்கு ஒரு செங்குத்தான வழி கண்ணில் பட்டது. Google maps இதுதான் ராசா வழி என்று சொல்லியது சுற்றும்முற்றும் சின்ன தோட்டங்களாக தான் இருந்தது. இந்த தோட்டங்கள் நகரவாழ் மக்கள் தமக்கென குத்தகைக்கு ஊருக்கு ஒதுக்குபுறமாக எடுத்து தோட்டமிட அளிக்கப்பட்ட இடங்கள். ஆளரவமற்று இருந்த அந்த இடத்திலிருந்து எப்படியும் பல்கலைக்கழகத்தை கண்டுபிடித்துவிடலாம் என்ற எண்ணம் கொஞ்சம் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமாக தான் தோன்றியது. ஆனால், என் நண்பி இந்த வழியாகவா தினசரி வருவார்? அவர் மனுஷிதானா? என்று ஏகத்துக்கும் வியப்படைந்தேன்.
ஒருவழியே இரண்டுபேர் என் முன்னே சைக்கிளில் என்றது கண்டு இது தான் வழி என தெரியவர அவர்களை மெதுவே பின்தொடர்ந்தேன். ஒருவரோ ஆள் ஆஜானுபாகுவான உருவம் பெடலின்மீதேறி மிதித்தவன்னம் மிகவேகமாக சென்றார், எப்படியய்யா இந்த மாதிரி எல்லாம் ஓட்டுறீங்க என்று நாக்கில் நுரைதல்லாதவன்னம் ஏதோ மிகமிதவேகத்தில் சென்ற என் கால்கள் தளர்ந்ததாக நானே நினைத்துக்கொண்டேன். கால்களல்ல நுரையீரலில் தீப்பிடித்த மாதிரி ஒரு எரிச்சல், இனிமேலாகாதப்பா என்று நிறுத்தி தள்ளதுடங்கினேன். காட்டுக்குள் நடக்கும் வழியைக் கண்டேன், சாலையிலிருந்து அந்த பக்கமாக இறங்கித்தள்ளத் தொடங்கினேன். என்னருகே ஒருவர் வந்துகொண்டே கேலியாக 'என்ன சைக்கிளில் மலைப்பாதை பயணத்துக்கு புதுச?' என்று கேட்டார். ஆமாம் என்று தலையசைத்தேன், 'முதல் நாள்தான், முடியல' என்று பதிலளித்தேன். வடிவேலு பிரபுதேவாவிடம் சொல்லுவாரே 'same blood', அந்த மாதிரி சொல்லி சிரித்தார். அவர் நடந்து தான் அன்று வந்துகொண்டிருந்தார். ஆனால் எனக்கு அது தான் ஒரே அனுபவமாகும் என்று நம்பிக்கொண்டு தான் ஆய்வறையை அடைந்தேன். சில நிமிடங்களில் அப்படி ஒரு கடினமான ஒரு பாதையைக் கடந்துவந்த ஒரு சோர்வுமில்லை. அதேசமயம் உடலில் ஒரு புத்துணர்ச்சியை உணர்ந்தேன்.
சவால்களை துரத்தி சாப்பிடும் அசாதாரண ஆசாமியெல்லாம் நானில்லை. ஆனால் தினசரி நான் பேருந்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கையில் சிலர் சைக்கிள் சகிதமாக வருவது எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது. காலை 6:45க்கெல்லாம் வேலைக்கு கிளம்பி செல்வதால் இதற்க்கு முன்பு ஆசையாய் விளையாடிய Badminton விளையாட முடியாது நிலை. அதுமற்றுமன்றி நரம்புசார் நோயியல்துறையில் இருப்பதால் இறந்தபின்னர் உடலுறுப்பு தானம் செய்பவர்களின் மூளையை கூறிட்டு பதப்படுத்துவதற்கு என் உயரதிகாரிக்கு உதவியாக எனக்கும் மாலை 5 அல்லது 6 மணியிலிருந்து சிலசமயம் 8 மணி வரை வேலை இருக்கலாம். என்றாவது நிகழும் இந்த உடற்க்கூறு ஆய்விற்கு தயாராக இருக்க வேண்டிய நிலைவேறு. அதனால் சைக்கிளிங் ஒரு நல்ல உடற்பயிற்சியாக தோன்றியது. தயாரானேன்..

No comments:
Post a Comment