நீண்ட நாளாகிவிட்டது, ஃபிஷெர் பற்றி சிலநாட்களில் பதிவிடுகிறேன். எதையாவது எழுதலாம் என்றே இதை எழுதுகிறேன்.
அரசியல், போராட்டம் இப்படி சில மாதங்கள் மிகவும் பரபரப்பா போனது அதனால் எதை எழுதுவது என்றுகூட யோசிக்க முடியாமல் ஒரு சில காலம் போனது.
யோசனை, ஆமா நீங்க எந்த மொழியில் சிந்திப்பீர்கள்? கொஞ்சம் இந்த கேள்வியை கூர்ந்து கவணிப்போம். ஜெர்மனியில் கால் பாதிக்கும் வரை எனக்கு படிப்பு, வேலை, படங்கள், செய்திகள் தவிர ஆங்கிலம் பயன்பாடு கிடையாது. பேசவேண்டிய அவசியமுமில்லை. தமிழ் தெரிந்தவர் தான் படித்தவர் என்று காட்டிக்கொண்டு பேசும்பொழுது வலுக்கட்டாயமாக ஆங்கிலம் கலந்து பேசினாலும், எனக்கென்னவோ அப்படி பதில் சொன்ன தோன்றியதில்லை. அதை பற்றி தனியே ஒரு பதிவிடுகிறேன். ஜெர்மனியில் சிலர் சொல்லும்பொழுது உனக்கு அழுத்தமான இந்திய உச்சரிப்பில்லை என்று கூறினர், செயற்கையான அமெரிக்க உச்சரிப்புமில்லை, காரணம் இந்தியாவிலோ அமெரிக்காவிலோ நான் ஆங்கிலம் அதிகம் பேசிதில்லை, அமேரிக்கா போனதில்லை, எண்ணமுமில்லை. ஆங்கிலம் பேசும்போது ஆங்கிலத்திலேயே சிந்திப்பதும், பன்மொழி பயிலும் இந்திய மாணாக்கருக்கு எளிதே.
மறுவார்த்தை பாடலை பின்னணியாக கேட்டுக்கொண்டே இதை எழுதுகிறேன், ரம்யமான இசை, குரல், பாடல் வரிகள். சரி, இப்படியாக மொழி, ஒலி மற்றும் நமது சிந்தனைக்கும் மிகவும் நெருக்கமிருக்கிறது.
கேள்வி: ஒருவர் செவிடாக பிறந்தால் அவர் சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்கும்? அங்கே எந்த மொழி பயன்பாட்டிலிருக்கும்?
செவிடாக பிறந்து அவ்வாறே வளர்ந்த ஒருவரின் பதிலை இங்கே பதிவிடுகிறேன். அவர் எந்த கேள்விச்சாதனமோ, வால்நரம்பு உள்வைப்பையோ பயன்படுத்துவதில்லை. அமெரிக்க சைகைமொழியை கற்றுத்தேர்ந்தவர்.
அவரின் மனத்திலும் குரலுண்டு, ஆனால் அவை ஒலியாலானவை அல்ல! அவர் மனதில் தோன்றுபவை காட்சிகளாலானவை, சைகைமொழியினாலானவை, படங்களும், சிலசமயம் அச்சிடப்பட்ட வார்தைகளாகவும் திகழ்கிறது. அவரின் மனதின் குரலிலும் வார்த்தை, கருத்துகள் மற்றும் எண்ணங்களும் நிறைத்தே இருக்கும். அவர் மனமொன்றும் நிசப்தமானதல்ல!
அவர் மூளையில் காட்சியுணர்வு, நுகருணர்வு, தொடு உணர்வு, சுவையுணர்வு ஆகியவற்றை செயலாக்கம் நடைபெறுகிறது, ஒலி தவிர!
படித்ததில் பிடித்தது.

No comments:
Post a Comment