அகஸ்டே கூறிய அந்த வாக்கியம் அர்த்தமுள்ள ஒன்று. பொதுவாக, இது ஒரு வயதுசார் நோய் 65 வயதிற்கு மேல் 10% இந்த நோய் தாக்க வாய்ப்புகள் உண்டு, 85% மேல் மூன்றில் ஒருவருக்கு இந்த நோயினால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரண மறதியிலிருந்து அல்ஸைமர் பல கோணங்களில் வித்தியாசமான, கொடூரமான ஒன்று. நாள்தோறும் செய்யும் செயலை பாதிக்கும்விதமாக ஞாபாகப்பிறழல் இருப்பின் அது அல்ஸைமர் நோய் அல்லது மற்றவிதமான ஞாபகமறதியாக இருக்கலாம். அல்ஸைமர் நோயைப்பொறுத்தவரை அது மூளையின் செயல்திறமை, ஞாபகம், சிந்தனைத்திறன் ஆகியவற்றை பாதிக்கும் ஒரு கொடிய நோய். இந்நோய் வருமுன் தெரியும் அறிகுறிகள் சிலவற்றை இங்கே கூறுகிறேன். நோய்வாய்ப்படுபவர்களுக்கு சில அறிகுறிகளும் அதன் வீரியமும் வேறுபாடும். மருத்துவர் தான் இதனை கணித்துக் கூற முடியும்.
- அன்றாட பழக்கவழக்கங்களை மாற்றுமளவு, ஒருவர் கற்றறிந்த விஷயங்களை செல்படுத்துவதில் சிரமம் உள்பட இந்த ஞாபகமறதி சற்றே சிரமமான ஒன்றாக இருக்கும். சகஜமாக ஞாபகம் வரும் நாட்கிழமைகளில் இருந்து, பிறந்தநாள் உள்பட சில முக்கியநிகழ்வுகளை மறந்துவிடுவர்.
- எண்களைக்கொண்ட சில வேலைகளை திட்டமிடல், கணக்கிடுதல், இவற்றில் பெருமளவு பிரச்சனைகள்.
- தினம்தினம் பயன்பதுத்தும் பாதைகளைக்கூட மறந்துவிடுவர்.
- தேதி, இருக்கும் இடம், வருடம்கூட மறந்துவிடுவர்.
- வார்த்தைகளை பிரயோகிப்பதிலும் எழுதுவதிலும் முகுந்த பிரயத்தனப்படுவர்.
- வண்டிஓட்டுவது, படிப்பது, தூரத்தை கணிப்பது என்பதெல்லாம் பிரச்சனையாயிருக்கும்.
- பாதைமறந்துவிடுவார், சகஜமாக மக்களிடம் பழகுவதிலிருந்து ஒதுங்கிவிடுவர்.
- படிப்படியே அவர்களது குணநலன்களிலும் மிகுந்த வேறுபாடுகள் தோன்றும்.
ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளராக சுழன்றுசுழன்று வேலைசெய்துபார்த்துவந்த ஒருவர் ஒரு சிறுகுழந்தையாய்தன் அன்றாட செயல்களை செய்வதில்கூட பிறரை நாடி வாழவேண்டிய ஒரு அவலநிலையில் வாழநேரிடும். வண்டியோட்ட முடியாது, ஒரு அறையிலிருந்து அடுத்த அறைக்கு செல்வர், சென்றதற்கான காரணம் மறந்துவிடும், ஒரு குழம்பிய மனநிலையிலே வாழ்வர். இவ்வாறு அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை அவர்களால் பகிரவும் இயலாமல்போக, மற்றவர்மீது எறிந்துவிழுவர். சிலருக்கு தான்பெற்ற குழந்தையே வளர்ந்த நிலையில் அடையாளம் காணஇயலாமல்போய்விடும். ''எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், ஆனால் அவள் நீயல்ல, அவள் சின்னப்பெண், நீயாரென எனக்கு தெரியாது'' என்று கூறுவது ஒன்றும் விந்தையான விஷமாக இருக்காது. சிலர் பணிஓய்வடைந்ததை மறந்து காலையில் அலுவலகம் கிளம்புவர். இவர்களுக்கு மனநிலை பாதிப்பு, அதாவது பைத்தியம் என நினைத்தால் அது தவறு. அவர்களின் மூலையில் ஏற்படும் கொடூரமான நிகழ்வுகளே காரணம்.. ஆம் பல்லாயிரக்கணக்கான செல்களை இழந்து அவர்கள் மூளை ஒரு மயானபூமியாவதே அவர்களின் இந்த நிலைக்கு காரணம்.
அப்படி என்னதான் பிரச்னை என்றால் இந்த படத்தை பாருங்கள்.
![]() |
| மூளையின் கூறுகளில் மாற்றம் |
சாதாரணமாக பாதிப்படையா மூளையக்காட்டிலும் அல்ஸைமர் நோயுற்ற மூளை மிகவும் சுருங்கிக்காணப்படும். நியூரான் எனப்படும் நரம்புசெல்கள் பலகோடி நம் மூளையிலிருக்கும், இந்த நோய்த்தாக்கியதன்விளைவாக பல செல்கள் இறந்துவிடுவதே இப்படி மூளை சுருங்கிக்கணப்படும் காரணமாகும். அகஸ்டே இறந்த பிறகு அல்ஸைமர் அவரின் மூளையில் ஆராய்ந்ததே அவரின் பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது. இப்படி அந்த நோய் பற்றி முதலில் ஆராய்ந்து அதைப்பற்றி அறிவியல் பதிப்புகளில் பகிர்வதால் அவரின் பெயரை நோய்க்கு சூடுவதானால் 'அல்ஸைமர்-ஃபிஷர் நோய்' என்று அழைப்பதே நியாயம். யார் அந்த ஃபிஷர்? அடுத்த பதிவில் அவரை சந்திப்போம்..

No comments:
Post a Comment