என் முதல் பதிவில் கூறியதைப்போல தமிழில் தங்குதடையின்றி சிந்திக்க முடிந்த எனக்கு கமல் ஹாசன் குணாவில் 'அந்த வார்த்தை தான் முட்டுது' என்று கூறியதைப்போல அந்த எழுத்துக்கள் தான் முட்டியது. லதாராணி அக்கா தான் அப்பப்போ பட்டி டிங்கரிங் எல்லாம் செய்வாங்க. அவர் ஒரு புலவர் என்பதை காட்டிக்கொள்ளாமல் நான் செய்யும் திருத்தழிப்பு (அதான் கற்பழிப்பை போல எடுத்துபிழையால் கருத்தை அழிப்பது), அல்லது Mr. Kaplan என்பவர் Red என்பவர் செய்யும் கொலைகளையடுத்து 'The black list' என்ற தொலைக்காட்சி தொடரில் சிந்தவிட்ட சாட்சியங்களை அப்புறப்படுத்தி காப்பாற்றுவாரோ அப்படி, செய்வதிலிருந்து என்னை காப்பாற்றினார். பிரச்சனை என்னவென்றால், நான் சற்றே பகடியாகக்கூறுவதைப்போல எனக்கு எழுதப்படிக்க தெரியாது. இதற்கு முந்தயப்பதிவிற்கு தாங்கள் கொடுத்த வரவேற்பு என்னை மேலும் சில முயற்சிகளை செய்யதத்தூண்டியது.
மிதிவண்டின்மீது அளவிட முடியா காதல் பிறந்தாலும் இந்த வருடம் பெய்யும் பேய் மழை கபாலி (road bike, cannondale synapse) தவிர்த்து காளி (trekking bike, Bulls comp 7000) தான் ரோட்டில்விட முடிகிறது. மிதிவண்டி பற்றி வேறொரு பதிவையிடுகிறேன். பணி தவிர்த்து ஓய்வு நேரங்களில் திரைப்படமில்லா/சாரா கேளிக்கைகளை தேடுகையில் இன்று தோன்றிய பொழுதுபோக்கே இப்படி பதிவிடுவது. இதை பிரதி வாரம் செயல்படுத்தும் அவா வந்தது. அதை பற்றி வாட்ஸாப்பில் பேசுகையில் சரவணன் கூறிய இன்றைய தலைப்பு 'ஜெர்மனியில் ஒரு அயல்நாட்டானாக ஆராய்ச்சி தவிர்த்து மற்ற சில பொதுவான விஷயங்களை பகிரச்சொன்னார். சொல்ல பல இருந்தாலும், இன்று கிடைக்கும் சிறிதளவு நேரத்தில் என்ன எழுத இயலுமோ அதை செய்கிறேன்.
மொழிப்பற்று ஒரு பத்தி எழுதிமுடித்தவுடன் தான் இந்த தலைப்பை அவர் சொன்னார், நாளை அவர் அதை எதிர்பார்ப்பார் என்ற எண்ணம், இதை மட்டும் இன்று பகிர நினைக்கிறேன். ஜெர்மன் மொழி சற்றே கடினமான ஒன்று, பொருட்களுக்கு (ஹிந்தியில் உள்ளதைப்போல) ஆண்பால் பெண்பால் போட்டு பேசுவர், மற்றும் அந்த பொருளைக்குறிக்கும் 'அந்த' என்ற வார்த்தை கூட அவளாகவும், அவனாகவும், அவளால், அவனாலும் என ஒரே குழப்பமாகத்தான் இருக்கும். இங்கு வந்து 11 வருடங்களலானாலும் அந்த மொழியைகற்க்க 48 மணிநேர வகுப்புகளை மட்டுமே என்னால் எடுக்க முடிந்தது. ஆனால் ஜெர்மன்னாட்டவர் ஒருவித சுற்றுலாப்பிரியர்கள், பலவிதமான நாடுகளை/ஊர்களை பார்க்க சேமித்து அங்கே செல்வர். 3 வாரங்களுக்குமுன் தன் படிப்பை முடித்த ஒரு பெண்ணை எதுத்து என்ன செய்யபோகிறீர் என்று கேட்டதற்கு சொன்ன பதில் 'இந்தோனேசியா போகப்போகிறேன், அதற்காக 2 வருடங்களாக சேமித்துவைத்திருக்கிறேன்'. இந்த மாதிரி சுற்றுலா 3-4 வாரங்கள் செல்லும் போது பொதுவாக அந்த நாட்டின் மொழியில் சில வார்த்தைகளையாவது தெரிந்துவைத்திருப்பர். வருடாவருடம் அதே நாடு பிடித்துப்போனால் மொழியை ஒரு அளவிற்கு நன்கு கற்றுக்கொள்வர். இப்படி எல்லாம் செய்யமல் ஆங்கிலத்தை அதுவும் அரைகுறையாகவோ அல்லது திருத்தமாக பேசவிதத்திலோ நம்மவர் சிலர் வேறு மொழிகள் எனக்கெதற்கு என்று ஆங்கிலத்தை நாடியே இன்னும் வாழ்க்கையை ஓடுகிறோம். மொழி, மொழியின்மேலுள்ள ஆளுமைதான் உங்களின் அறிவுக்கூர்மையைவெளிப்படுத்த பயன்படும் என்பது நிதர்சனம். மணி 11, நாளை 1 வாரம் விடுப்புக்குப்பின் வேலைக்கு செல்லும் முதல் நாள். மீதியை நாளை தொடர்கிறேன்..

"மகிழ்ச்சி"...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !
ReplyDeleteநன்றி! நீங்க கொடுத்த நம்பிக்கைல தான் எழுதறேன்.
Delete