வலைப்பதிவுகளை ஆரம்பிக்கையில் கடவுள் வாழ்த்துடன் துவங்குவோம்..
என் நட்புவட்டத்தில் பலர் ஆத்திகராக அமையப்பெற்றதால் இந்த கருத்தை மிகவும் கவனத்துடனே எடுத்துரைக்கிறேன். படித்த பிறகு தாங்கள் ஆத்திகராவோ நாத்திகராகவோ இருக்கலாம்/மாறலாம் ஆனால் என் நண்பராகவே தொடர விரும்புகிறேன்.. வாழ்த்திற்கு வருவோம்..
கடவுள் வாழ்த்து : இதை கேட்கும்பொழுதே இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட 'வேண்டும் முறை' என்றே தோன்றுகிறது. கடவுளை எதற்காக வாழ்த்த வேண்டும்? வாழ்துவதனாலேனும் வேண்டியது கிடைக்கும் என்ற அவா. சரி, இது மனிதன் செய்யும் பிராத்தனை இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை என்ற வாதத்தை எடுத்தாலும் இடரும்.
கடவுள் கலாசார சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு கதாபாத்திரம்!
ஆச்சரியமாக இருக்கிறதா.. இதோ சில உதாரணங்கள்..
நீலக்கண்ணனின் கோபியர்க்கூட்டத்தில் நீலக்கண்களுடன் எந்த பரங்கிப்பெண்ணும் குழலிசைக்கு அபிநயம்பிடிக்கவில்லை..
ஏசுநாதர் ஓ மதுரையே என்று அறைகூவளிடவில்லை..
முகம்மது நபி எந்த தாமரை மலர்பாதமுடைய கடவுளையும் வணங்கவில்லை..
கணபதிக்கு நாம் நூடில் நெய்வேதியமும் படைப்பதில்லை..
எகிப்திய கடவுள்கள் எந்த திரிசூலத்தையும் எந்திடவில்லை..
இந்திரன் ஹபியையும் கண்டதில்லை..
கிறிஸ்து உயிர்பெற்றெழும்போழுது யமதேவன் காட்சியளிக்கவில்லை..
இதுபோல உதாரணங்களை அடுக்கிச்செல்லலாம்!
கடவுள் நாடுகளையும் கலாச்சாரங்களையும் கடக்கவில்லை.. இதில் கவணிக்கவேண்டிய அம்சமென்னவென்றால் அவ்வாறு மதங்களை நிறுவியவர்கள் பெரும்பான்மையானோர் (ஏசுவை தவிர) ''அரசர்/அரசியல்வாதிகள்''. ராமன், மோசஸ், முகம்மது நபி, புத்தன், கண்ணன் இவ்வாறு அடுக்கிச்செல்லலாம். பல கலாச்சாரங்களில் மனிதருக்கு அப்பாற்ப்பட்ட சக்தியை (இயற்கையை) தொழ துவங்கியது தமிழ்த்தோன்றா காலம்..
இப்படி இயற்கையை வியந்து அஞ்சி வணங்கிவந்த மனிதன் பின்னாளில் கடவுளின் பெயரால் பிரிந்து.. தானும் உயிர்துறந்தான் பிறரரையும் உயிர் பலி வாங்கத்துணிந்தான்.. கிடைத்த வாழ்க்கை கடவுள் அளித்த பிச்சை என்ற எண்ணம் மறைந்து கடவுளுக்கு தான் அளிக்கும் காணிக்கையாய் முடிமுதல் உயிர் வரை துறக்க நேர்ந்ததே பரிதாபம்..
கடவுள் வாழ்க! மனித மூளையில் பிறந்த கடவுள் பல்லாண்டு வாழ்க!!
இப்படி இயற்க்கையை வியந்து அஞ்சி வணங்கிவந்த மனிதன் பின்னாளில் கடவுளின் பெயரால் பிரிந்து.
ReplyDeleteஆம், உயிரின் அச்சம் தான் "அப்பாற்பட்ட சக்தி" (Supernatural) நம்பிக்கைகளுக்கு அடித்தளம்.
இப்படி இயற்க்கையை வியந்து அஞ்சி வணங்கிவந்த மனிதன் பின்னாளில் கடவுளின் பெயரால் பிரிந்து.
“I contend that we are both atheists. I just believe in one fewer god than you do.
ReplyDeleteWhen you understand why you dismiss all the other possible gods, you will understand why I dismiss yours.”
- Stephen F Roberts
ரகு,
ReplyDeleteஎனக்கு அந்த ''இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட'' என்ற கருத்தே வியப்பை அளிக்கிறது.. நாம் காணும் காட்சிகள் அனைத்துமே இயற்கையானவை.. நம்மால் அறியமுடியவில்லையெனில் அதை தெய்வீகமான அல்லது இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட என நினைப்பதை மக்கள் தவிர்க்கவேண்டும். என் அழைப்பிற்கு இணங்கி எனது பதிவுகளை பார்வையிட்டு கருத்தும் தெரிவித்தமைக்கு நன்றி.