Saturday, 23 April 2011

புனித வெள்ளி..





இன்று புனிதவெள்ளி.. சற்றே கவனமாக பார்ப்பவர்களுக்கு ஒன்று புலப்படும்.. சித்திரைத்திருநாள் மற்றும் ஈஸ்டர் ஒரே மாதத்தில்கொண்டாடப்படும் சமயம்/கலாசாரம் சார்ந்த திருவிழாக்கள். ஏதோ சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்தவை அல்ல. இதற்கு பின்னால் முன்னாளில் கணிக்கப்பட்ட நிகழ்வுகளின் நிழல்கள் புலப்படும். சற்றே தெளிவாக பார்ப்போம். 

நம்மில் பலர் 'சமயம்சார்ந்த விழிப்புணர்வில்லாமல்  பின்பற்றுகிறோம்/தூற்றுகிறோம். மதங்கள் ஏன் பிறந்தன என்பதை அறியும்பொழுதே நாத்திக மற்றும் ஆத்திகரின் குறுகிய கண்ணோட்டமும் விலகுமென்பது என் கருத்து. 

சென்ற பதிவில் கூறியது போல இயற்கைக்கு அஞ்சி மனிதன் அதை வணங்க விழைந்தான்.  இரவு-பகல்வெய்யில்-மழை, பனி என எல்லாவற்றையும் ஒருவியப்புடனே கண்டான்.  தனக்கு நிகழும் இவையெல்லாம் வானத்தில் இருந்து வரும் சமிக்ஞைகளாகவும்இவற்றை ஒரு/பல அதிசய சக்தி படைத்த மனிதனல்லாத மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு/பல ''இறை-பொருள்'' அடக்கி ஆள்கிறதென்றும் நம்பத் துவங்கினான்.   இவை அனைத்திற்கும் சூரியன் காரணகர்த்தா என்றும் தீர்மானமெடுத்தான்.  

சரி இதற்கும் புனித வெள்ளிக்கும் என்ன சம்பந்தம்கர்த்தருக்கும் சூரிய காரணகர்த்தவிற்கும் என்ன தொடர்புகாண்போம்..

சூரியன் இவைகளை தீர்மானிக்கிறது என்ற கண்ணோட்டத்துடன் பல வானியல் நிகழ்வுகளை கவனித்தான். இவ்வாறு பிறந்த முதல் அறிவியல் அணுகுமுறைமீது  துரதிஷ்ட்டவசமாக இறை சாயம் பூசப்பட்டது. சூரியன் 'இயற்கை வழிபாட்டின்' (Pagan) கருவானது. கால மாற்றங்கள் சூரியன் செய்யும் காரியமாக அறிந்த பின் சூரியனை வணங்கினால் இயற்கை சீற்றத்திலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று நம்பினான். அவ்வாறே பிறந்த வழிபாட்டு/கொண்டாட்டமே வசந்த கால கொண்டாட்டங்கள்.

ஈஸ்டரும் அவ்வாறே பிறந்தது. 

குளிர்காலத்தில் பலமிழக்கும் சூரியன் திரும்ப விஸ்வரூபமெடுக்கும் நாளே புனித வெள்ளி. இயற்கை-வழிபாட்டாளர்கள் (Pagan),   யூதர்கள் ''Passover''என்று கொண்டாடும் இந்த வானியல் நிகழ்வே Easter என்னும் புனித வெள்ளி.. Easter என்ற சொல்லே East என்னும் கிழக்கை (சூரியனை) கொண்டாடும் விழா. அதாவது சூரியன் வசந்த காலத்தை தீர்மானிக்கும் சூரியனின் Vernal Equinox பிரவேசமே Easter. 

இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இயற்கை வழிபாட்டின் பின்னணியையும் அடுத்த பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம்.. தொடர்ந்து படியுங்கள்.. தங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்யுங்கள். 

1 comment:

  1. சித்திரைத் திருநாள் புனித வெள்ளி... சூரியனை
    ஆதாரமாக வைத்துக்கொண்டாடப்படுக்றதென்பதை அழகாகப் பதிவிட்டிருக்கிறீர்.

    குளிர்காலத்தில் பலமிழக்கும் சூரியன் திரும்ப விஸ்வரூபமெடுக்கும் நாளே புனித வெள்ளி.

    முதல் அறிவியல் அணுகுமுறை துரதிஷ்ட்டவசமாக இறைச் சாயம் பூசப்பட்டது....

    அருமையான எழுத்துக்கள் கார்தீ.... மூடநம்பிக்கைக்கு இன்னொரு பெயர் இறைச்சாயம்.... வாவ்!

    ReplyDelete