வழக்கம் போல கொடியேத்தியாச்சு.. அறிமுகம் இல்லாத பிரமுகர் பள்ளிகளில் அணிவகுப்பு ஏத்துக்கிட்டார்.. மிட்டாய் கொடுத்தாச்சு.. 2-5 குந்தகம் செய்யவந்த தீவிரவாதிகளை சுட்டு கொன்னாச்சு.. குடியரசு தலைவர் குண்டுதுளைக்காத கண்ணாடி பின்னின்று ஏதோ நாளைக்கே இந்தய பொருளாதாரமும் பலமும் பல மடங்கு அபிகரிக்கும் என்ற அடிப்படையில் பேசும் கொடுத்திருப்பார் (அந்த செய்தி எல்லாம் படிக்கவும் இல்லை)
ஆங்கங்கே கொடிய தலைகீழா ஏத்தியாச்சு, அணிவகுப்பு செய்த சாரணர்களில் சிலர் மயங்கியும் விழுந்தாச்சு.. இது வழக்கமா நடக்கறது, முதல்வர் ஒரு ஆர்பாட்டம் செய்து சாலையை மறித்து குடியரசு தின நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கொடுக்க இருந்த காவல்துறைக்கு ஏதோ தன்னால் முடிந்தவரை உபத்திரவம் கொடுத்தார். எல்லாம் விடுங்க.. கொஞ்ச காலமாகவே எதாவது எழுதணும் என்றும் நம்ம சுதந்திரம் பற்றி என் மனதுக்கு பட்டதை எழுதணும் என்றும் எண்ணினேன். அவை இதோ உங்கள் பார்வைக்காக.
மகாத்மா/அண்ணல் காந்தியடிகள் போராடியதால் சுதந்திரம் கிடைத்தது.. அப்படியா? வெள்ளையனே வெளியாரு நம்ம தலைவர்கள் ரொம்ப வருடங்களா தான் போராடினார்கள் அதுக்கு ஆங்கிலேயர் செவிசாய்த்ததாக தோன்றவில்லை. 1857ல் சிப்பாய் கலகம் தான் முதல் சுதந்திரப்போராட்டமாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் 15, 1947ல் தான் கிடைத்தது சுதந்திரக்காற்று. அதற்க்கு முன்னரே வேல்லூரில் நடந்த கலகமோ, கட்டபொம்மனின் போரோ ஆங்காங்கே நிகழ்ந்த சிறு சிறு போராட்டமோ பெரிதாக எடுதுக்கொள்ளப்படவில்லை. அத்திப் பூத்தாற்போல் திடீர்னு ஏன் சுதந்திரம்?
இரண்டாம் உலகப்போர்ல நல்ல அடி வாங்கின அப்புறம் போரில் பங்குபெற்ற அத்தனை நாடுகளுக்கும் நிதிப்பற்றாக்குறை வந்தது, இதை சமாளிக்க முடியாத ஆங்கிலயரும் தமது ஆட்சியின்கீழ் இருந்த இந்தியா/பாக்கிஸ்தான் ஆக 1947லும், 1946ல் ஜோர்டான், மற்றும் 1948ல் இலங்கைக்கும் பர்மாவிற்க்கும் சுதந்திரம் மற்றும் இஸ்ரேலை தனி நாடப்பிறித்து தனது வள்ளல் குணத்தை காட்டியது. நம்ம புத்தகத்தில நமக்கு தேசப்பற்று புகட்ட இந்த விஷயங்களை தவிர்த்ததாக நினைக்கிறேன். வழக்கம் போல இந்திய காங்கிரஸ் அரசு அதா காந்தியின் சாதனையாக அறிவித்தது.
இதுல சிறப்பம்சம் என்னவென்றால் அந்த தேதி தான் ஆகஸ்ட் 15ல அப்படி என்ன நடந்தது? பெருசா ஒன்னும் இல்லீங்க, நம்ம மவுண்ட்பேட்டன் பிரபு இருந்தார்தானே அவர் ஜப்பான் சரணடைந்த ஆகஸ்ட் 15ஐ நினைவுகூறும் விதமாக நமக்கு இந்த தேடிய கொடுத்தார். பாக்கிஸ்தான் நமக்கு முன்னாடி இருக்கணும்னு ஒரு ஆசை அதான் ஒரு நாளைக்கு முன்னாலாவது எங்களுக்கு கொடுங்க எஜமானு கேட்டு வாங்கிக்கிசு. இது தான் என் அறிவிற்கு எட்டிய ஒரு காரணம். வரலாறு வலைக்கப்படுவது சகஜம் தான். நம்ம நாட்டுல ரொம்ப சகஜம் மற்றும் இதெல்லாம் யாருங்க கண்டுக்க போறாங்க?
பின்குறிப்பு: நாட்டின் மீது உள்ள மதிப்பினால் தான் இப்படி எழுதறேன், மயங்கிவிழுந்த NCC, NSS, JRC மற்றும் சாரனரில் வருடா வருடம் நம்ம பெயரும் இருந்துச்சு.. தேசபற்றாக்கும்!

No comments:
Post a Comment