காலச்சக்கரத்தின் சுழற்சி தொடர்கிறது. கர வருடம், ௫௧௧௩ ஆம் ஆண்டு, கலியுகம்..
சற்றே திரும்பிப்பார்க்கும் பொழுது மனக்கண்ணில் பதியும் சில காட்சிகள்..
வருடாவருடம் சித்திரை திருநாளன்று என் கண்களை அணைத்தபடியே பெற்றோர் துயிழெழுப்புவது வாடிக்கை.. அந்நாளில் நாங்கள் காணும் முதல் காட்சி முக்கனி, நவரத்தினம், பட்டு, மலர்கள், ஒளிரும் தீபமென அன்று காண்பவை மிகவும் பரவசமாயிருக்கும். செர்மானிய வாழ்க்கையில் இந்த சுகங்களை மிகவும் தவறவிட்டோம் என்ற எண்ணத்துடன் துயில் கலைந்தேன்..
தமிழ் மற்றும் தமிழ் காலச்சாரம் மறைந்து வரும் இந்த காலத்தில் சற்றே தமிழ் சார்ந்த தேடலுடன் துவங்கிய நாளில் ஆய்வகத்தில் நிகழ்ந்த சிறிய உரையாடலின் சாரத்தை பதிவு செய்கிறேன்.. இன்னும் இரண்டு நாட்களில் தன் செய்முறை கல்வியை நிறைவு செய்யவிருக்கும் எனது ஆய்வக மாணவன் பெயர் மானுவேல் எழுப்பிய வினா ஒன்றே என்னை இந்த பதிவை செய்ய உந்தியது. அவனுக்கு இன்றைய நாளைப்பற்றி கூறினேன்.. இன்று தமிழ் வருடப்பிறப்பு எங்களது தேசத்தில் இதை வெகு விமர்சையாக கொண்டாடவில்லையென்றாலும் எனது பால்ய பருவத்து நினைவுகள் என்னை வருடியதையும் நாங்கள் எப்படி புதிய வருடத்தை வரவேற்போம் என்பதையும் விளக்கிக்கூறினேன். புதிய வருடம் என்றான் எத்தனையாவது என்று வினவினான்.. பதில் என்னிடம் இல்லை.. சற்றே இணையத்தில் ஆராய்ந்த போது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தகவல் இது ௫௧௧௩ (அதாவது 5113 ) ஆம் ஆண்டு. இது தமிழ் ஆண்டா அல்லது இந்துமத ஆண்டா என எனக்கு பிரித்து பார்க்க முடிந்தது. கலியுகம் என்பது இந்து மத சம்பந்தமான சமாசாரம்.. இதைப்பற்றி மற்றொரு நாள் விலாவாரியாக காண்போம்.. நான் பதிவு செய்த எண்ணியது நம்மில் பலருக்கு இது எத்தனையாவது ஆண்டென்று தெரியாமலிருக்க வாய்ப்புள்ளது..
காதலர் தினத்தையும் ஆங்கில புத்தாண்டையும் நினைவுறுத்த தேவையில்லை நம் கலாசாரம் சார்ந்த பல தகவல்களை பதிக்க நம் மூளையில் இடமில்லாதது வருத்தமான செய்தி. ஆங்கிலத்தில் எழுத தமிழில் எழுதுவதை விட பாதி கால அவகாசமே தேவைப்பட்டாலும் தமிழிலே எழுதோவோம் என்ற எண்ணத்துடன் எழுத்தை தொடர்கிறேன்.. இயன்றவரை அவகாசம் கிடைக்கும்பொழுதெல்லாம் இந்த பதிவை தொடரும் தீர்மானத்துடன் பயணிக்கிறேன்.. காலச்சக்கரம் சுழட்டும்..
தங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுக!
தங்கள் எழுத்து எனக்கு பிடித்துள்ளது, நாம் அதிகம் ஆங்கிலத்தில் பயனிக்கும் சூழல் இருப்பினும், பல சமய்ங்களில் தமிழில் படிப்பது நிறைவளிக்கிறது.
ReplyDeleteதமிழ் வருடப்பிறப்பு சார்ந்த நண்பரின் ஓர் பதிவு. சிலரக்கு உடன்பாடு இருக்கிறது, சிலருக்கு இல்லை, இருப்பினும் எனக்கு ஏற்புடைய அலசல்.
http://ilavarasanr.blogspot.com/2011/04/blog-post_13.html
அன்புடன்
ரகுநாத்.